Employment

பெண்களுக்கான சுய தொழில் முனைவோர்

கைவினை கலை பயிற்சி

கைவினை கலை பயிற்சிக்கான பொருட்கள் வழங்குதல்

Training Program for Women’s Self-Employment

பெண்களுக்கான 5 நாள் சுய தொழில் முனைவோர் கைவினை கலை பயிற்சி பொய்கை கிராமத்தில் 5 நாட்களும் மற்றும் கள்ளம்புள்ளி கிராமத்தில் 5 நாட்களும் [19-01-2023 to 19-02-2023] நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் துவக்கவிழா 19.1.2023 அன்று நடைபெற்றது. முனைவர் அ. அரிகரன் நிறுவனர் SALIS & LCDC அனைவரையும் வரவேற்று பேசினார்கள். இந்த பயிற்சியின் முக்கியதுவத்தை விளக்கினார்கள்.
திரு. ஆ. சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), உறுப்பினர் 1 வது வார்டு, பொய்கை ஊராட்சி & ஒருங்கிணைப்பாளர், LCDC முன்னிலை வகுத்தார்கள்.
திரு. S. ஜெயக்குமார் B.A., தலைவர், பொய்கை ஊராட்சி தலைமையுரையாற்றினார். பயிற்சிக்கான பொருட்களை பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கினார்கள்.
திரு. M. சுடலை முத்து, VAO, பொய்கை, திரு. A. ரமேஷ், பொய்கை ஊராட்சி,மற்றும் திரு. K. ராமசாமி, பொது நூலகம், செங்கோட்டை அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
திருமதி வி. முத்து லெட்சுமி, மைய அலுவலர், LCDC, பயிற்சி ஆசிரியரை அறிமுகபடுத்தினார்கள்.
திருமதி H. செண்பகவல்லி, கைவினை கலை ஆசிரியை, சஞ்சய் அகாடமி நிறுவனர் & தொழில்முனைவோர், ஆய்க்குடி பயிற்சியை பற்றி விளக்கினார்கள்.
சொ. கதிர்வேல்முருகன், செயலாளர், LCDC நன்றியுரையாற்றினார்.

பெண்களுக்கான 5 நாள் சுய தொழில் முனைவோர் கைவினை கலை பயிற்சி பொய்கை கிராமத்தில் 5 நாட்களும் மற்றும் கள்ளம்புள்ளி கிராமத்தில் 5 நாட்களும் [19-01-2023 to 19-02-2023] நடைபெற்றது.

உல்லன்/ எம்பிராய்டரி / கை வேலைப்பாடுகள், பொம்மை  பூக்கள் / செயற்கை நகைகள் செய்தல் ( embroidery, Jewelry making, fashion jewelry, paper jewelry toys, woolen work, crochet ) பயிற்சி பொய்கை கிராமம் மற்றும் கள்ளம்புள்ளி கிராமத்திலுள்ள 60 பெண்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

 

 

Design a site like this with WordPress.com
Get started