நூலகம்

+

+

உலகின் பெரிய மாமேதைகள் அனைவருமே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. வாசிப்பு பழக்கத்தை உண்டாக்கி கொள்வதன் மூலமே இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாய் பரிணமிக்க முடியும். புத்தகங்கள் வாசிப்பதன் வாயிலாக ஒருவரின் சிந்தனை திறன் மேலோங்கும், சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும். எது குறித்தும் எவரிடமும் தயக்கமின்றி பேசமுடியும். வாழ்க்கையின் நெறிமுறை, நல்லொழுக்கம், நற்குணங்களை நம்முள் விதைப்பவை  நல்ல புத்தகங்களே.

ஒரு கிராமத்துக்கு ஒரு கோவில் மிகவும் அவசியம். ஒரு நூல்நிலையமும் அவசியம். பக்திக்காகவும் ஆன்மீகத்திற்கும் கோவிலுக்கு செல்கின்றோம். நம் அறிவை வளர்ப்பதற்காகவும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவதற்க்காகவும் தவறாமல் நூலகம் சென்று படிக்கவேண்டும். தவறாமல் நம் குழந்தைகளுக்கு தினமும் புத்தகத்தை வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

பொய்கை கிராமத்தில் ஒரு நூல்நிலையம்- லைப்ரரி Library இல்லாததால் நாம் தினமும் நூலகத்திற்கு சென்று படிக்க முடியவில்லை.

எனவே நம் சமுதாய மக்கள்  பயனடைவதற்காக நம் பஞ்சாயத்து கட்டிடத்தில் ஒரு நூலகம் அமைக்கவிருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்துகொண்டிருகின்றது. வருகின்ற மே 12 ஆம் தேதி திறப்பதாக உத்தேசிக்கபட்டுள்ளது.  நம் சமுதாய மக்களுக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைக்கும் நூலகமாகும். இந்த நூலகத்தை நடத்த  ஒரு நூலக ஆலோசனை குழு அமைக்கபடுகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் அதில் இணைந்து தங்கள் ஆலோசனைகளை தெறிவித்து நூலகத்தை சிறப்பாக நடத்த உதவவும். எலோருடைய ஒத்துழைப்பு இருந்தால்மட்டுமே நூலகத்தை சிறப்பாக நடத்தமுடியும்.

நூலகத்தில் கீழ்க்கண்ட பொருள்களில் புத்தகங்கள் இருக்கின்றன
மழலையர்
சிறுவர்கள்
கதை
நாவல்
கட்டுரை
இலக்கணம்
பொது அறிவு
வாழ்க்கை வரலாறு 
அறிவியல்
சிறுவர் ஆங்கில கதைகள்
ஆங்கில கதைகள்
ஆங்கில நாவல்
ஆங்கில கட்டுரை
ஆங்கில இலக்கணம்
கல்வி
திறன் மேம்பாடு
கவிதை
தத்துவம்
ஜோதிடம்
அழகு குறிப்பு
சுகாதாரம்
மருத்துவம்
சமையல்
சமயம்
வணிகம்
விவசாயம்
சட்டம்
மேலாண்மை
தொழில்நுட்பம்
Design a site like this with WordPress.com
Get started